Tuesday, January 25, 2005

புனைவு

கழியும் பழையது
கரை

எழுத்தனுக்கு கரை கிறுக்கற்கோடுகளாக அலைப்படிமங்களுக்குப் பின்னால் தெரிந்தபோது, அகன்ற ஆற்றின் படகோட்டத்தைப் பற்றிய பயம் கொஞ்சம் மறந்தது. கரையை அடைய இன்னும், -விழுந்தால் நீச்சல் தெரியாத இவன் தாக்குப்பிடிக்கமுடியாதளவு- நேரமும் ஆழமும் இருந்தாலும், கரையைத் தன்னொரு புலனூடாகத் தொடர்பு கொண்டது பயத்தினைப் பின்தள்ளிப் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தியது. விபரமறிந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்ட, கடந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களினூடே அக்கறையுடன் கேட்டறிந்துகொண்ட அக்கரை. இவனைப் பெற்ற பெரிய எழுத்தரும் அவரைக் காண அடிக்கடி வரும்-போகும் பிற எழுத்தர்களும் பேசிக்கொள்ளும் முற்றத்து வாங்கடியிலே குந்திக்கொண்டு தன் மண்ணோடு மண்ணாக உணர்ந்த கரை.

No comments: