Wednesday, February 02, 2005

புனைவு

கழியும் பழையது
தீக்கங்கு

உராய்வு; காலங்காலமாக பார்த்தும் முகர்ந்தும் இருந்தபின், காற்றுக்கும் அவை மேல் வேடிக்கையின் சுதி மீறித் தட்ட, மோகமோ கோபமோ......மேனி முட்டித் தேய்த்து, பின் தவறோவென சட்டென விலகிக்கொண்டன இரட்டைத்தண்டுகள். முற்றென முற்றியவையல்ல; மாறாய், முனை பச்சைப்பால் சொட்டும் பீலிச்சொண்டு கொள் பாலகத்தண்டுகளுமல்ல; காலத்தட்பவெட்பத்தே புறமேனி சுவறிக் காயவும், தாபவெம்மையால் பால் பாசியாய்ப் படர்ந்து பசையாய் ஒட்டியும் ஓடியும் கிடக்கும் உள்ளத்தவை;

No comments: