Tuesday, March 22, 2005

கணம் - 461

மூக்கைத் தோண்டாதே

பொறு கொஞ்சம்!
மூக்கைத் தோண்டாதே.

ஒத்துக்கொள்கிறேன்;
உன்னதுதான் மூக்கு.
ஒப்புக்கொள்கிறேன்;
ஊத்தைதான் உள்வந்தது.

என்றாலும் பொறு; நக
விரல் நுழைத்து வெளிக்
கழிக்காதே நாற்றச்சளி
உனதென்றாலும்
உன்னிஷ்டப்படி.

நம்நாட்டில்
உள் மூச்சு ஒடுங்கி முட்டும்
உன் மூக்கைத் தொடவும்
தோண்டவும் உண்டு விதி.

உன் ஒல்லிச்சளி
மூக்கு வைத்தியத்துக்கும்
வைத்தியம் சட்டத்துக்கும்
சட்டம் சர்வ அரசுக்கும்
அரசு தேவ ஆலயத்துக்கும்
ஆலயம் தெய்வ ஆகமத்துக்கும்
கீழ்ப்பட்ட படிநிலை ஆச்சோ, பார்,
அதனால், ஆகமம் அவதானித்துச்
சொல்லும் உன் களிச்சளிக்கு
மூக்கு, சரியா பிழையாவென்று.

ஆகமத்துக்குப் பிடித்த சளி
தொடுப்பாய் விதியுண்டு கண்டாயா?

விரையாதே; விண்ணப்பி,
விண் கைதூக்கி, உன்னைப்
பிடித்த சளி தோண்ட ஓர்
உத்தரவு தாருமென்று.

'05 மார்ச், 22; 18:04 கிநிநே.

5 comments:

Thangamani said...

//உன் ஒல்லிச்சளி
மூக்கு வைத்தியத்துக்கும்
வைத்தியம் சட்டத்துக்கும்
சட்டம் சர்வ அரசுக்கும்
அரசு தேவ ஆலயத்துக்கும்
ஆலயம் தெய்வ ஆகமத்துக்கும்
கீழ்ப்பட்ட படிநிலை ஆச்சோ, பார்,
அதனால், ஆகமம் அவதானித்துச்
சொல்லும் உன் களிச்சளிக்கு
மூக்கு, சரியா பிழையாவென்று.//

:)

Anonymous said...

அடச்சே...

தென்னையும், பனையும் ஒன்றுதானா..??

நிசமாவா..??

-/பெயரிலி. said...

என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை; ஆனாலும், இருக்கலாம் சாக்ரமே :-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//விரையாதே; விண்ணப்பி,
விண் கைதூக்கி, உன்னைப்
பிடித்த சளி தோண்ட ஓர்
உத்தரவு தாருமென்று.//

நல்ல நக்கல். :)

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி