Thursday, January 05, 2006

அகழ் - 3

அ(ல)ம்புஜ அ(ர)ட்டை

அம்புஜ அரட்டை எங்குறதே தன்னளவுள வாராவாரம் நடக்குற நகைச்சுவையான நிகழ்ச்சின்னு தோணுது.



"தலைவர் வாறாரு"

"பராக்குப் பாக்காதே! பராக் பராக்!!"


"தலவர்" - "வாழ்க"

"தமிழுலக எலக்கியமே" - "வாருக"

private "கிரனடா தோஸ்த், பாத்துத் தட்டுங்க. வாருக இல்ல; வருக. தலவரு கடுப்பாகப் போறாரு" private

Do 10 I = 1, 5
Print *, "Hail our Writer!", I
Print *, "Hip Hip Hurry!!", I
Print *, "Hand over him the Gobble", I
Print *, "சார் பாதம் போற்றுதி!", I
Print *, "சாரை மரத்துல ஏற்றுதி!!", I
Print *, "சாரு கைல கல; மூஞ்சில கள, கழுத்துல மால", I

10 CONTINUE

"அம்புஜம் எணைய எதழ் சார்புல சுனிதா சாருக்கும் அவரோட ஓலை, சைனா,சப்பான், பேரீச்சம்பழ விசிறிகளுக்கும் வணக்கத்த சொல்லிக்குறேன்"

"தலவரே, ரொட்டித்துண்டும் இட்லிச்சட்டியுமுன்னு ஒரு ரெண்டு வரி கவித எழுதிருக்கேன். அனுப்பினா, அணைச்சுக்குவீங்களா?"

"ரசிகரு, சித்த என்னோட டயரியப் பாரும்; நேக்கு இத வாசிக்க சனி கால மூணுமணிக்கும் மூணு ரெண்டுக்குமிடல டைம் இருக்கான்னு"

"சார்! கால ரெண்டு அம்பத்தெட்ல இருந்து ரெண்டு அம்பத்தொண்ணு வரைக்கும் ழு-பத்தி இழவு, தமிழு, களவு, காம்ப்யூட்டரு, நெளிவு, சூரத் எலக்ரானிக்கு, குழைவுன்னு ஒரு வசனம் எழுதருக்கீங்க. பின்னாடி, ஒரு நிமிசம், சுண்டுவெரல்நகத்துள்ளாற பூந்த அழுக்குச்சுடர்ன்னு ஒரு ஈரடிமான பைனரிவெம்பா எழுதுறீங்க. மூணுக்கும் மூணு ஒண்ணுக்குமிடல சொவரில விக்ரம் மாதிரி சர்ன்னு ஒண்ணுக்கடிக்க பாத்ரூம்போறப்ப, குடகேஸ்வரங்குற எழமெளுத்தாண்டவர்க்கு சொல்லிலே கஞ்சத்துடன் மகுடம்சூடும் மாகவிஞ்சன்னு ஒரு வரி சொல்லிப்போறீங்க. திருப்ப வரக்குள்ள, மான்னா குதிர, கவின்னா கொரங்குன்னும் சாடமாடயா ஒரு குத்து வெக்கச்சொல்றீங்க; அப்புறம்..."

"வாணாம் ரசிகரே, அநாவசியம்; அரட்டக்குறிப்புலருந்து இந்த ரிக்வஸ்ட அப்புறப்படுத்திடுங்க."

Do 20 I = 1, 25
Print *, "Hail our Writer!", I
Print *, "Hip Hip Hurry!!", I
Print *, "Hand over him the Gobble", I
Print *, "சார் பாதம் போற்றுதி!", I
Print *, "சாரை மரத்துல ஏற்றுதி!!", I
Print *, "சாரு கைல கல; மூஞ்சில கள, கழுத்துல மால", I

20 CONTINUE

"டியர் சுனிதா சார், எங்க பாமிலில எட்டுப்பேரு ஆயாசமில்லாம ஆண்டாள்மாலை, எலக்கியச்சேவை, பால்பாயாசம், போளிபோண்டாபூந்தி, அக்கார அடிசில், உக்கார உடசல்ன்னு பண்ணிருக்காங்க. அவுங்க யாருன்னு ஒங்களுக்குச் சொல்லமாட்டன். ஆனா, அந்த லிட்டரரி பாக் அப் பிளஸ் குக்கரி ஸப்போட்டோட ஆயிரத்தெட்டுப்பக்க எழுத்தாளர் ஹயஹோஹன் கத போருன்னு நெனைக்குறன். நீங்க என்ன நெனைக்குறீங்க"

"போர்தான்"

"என்ன சார் ஒத்தச்சொல்லா போருன்னு சொன்னா எப்புடி? தமிழ்ல போரா இங்கிலீஸ்ல boreஆ, இல்ல சாதா வயலு வய்க்கோலுப்போரா? வெளக்கமாத்தான் சொல்லுங்களேன்"

"அதெல்லாம் பத்தி வெளக்கம் எழுத எனக்கு நேரமில்ல. பழைய கழுத்துமால மாகஸீன் அத்தனையும் கைல வெச்சிருக்குற ஒரே காரணத்தால மட்டும் சுருக்கம் வெளக்கம் எழுதுறளவுக்கு நேரமுருக்குற வேற வேலைல்லாத வயசானவுங்ககிட்ட கேளுங்க. எனக்கு பொரியல்வைச்சான்புள்ளகிட்ட மொறுமொறுக்கு நாக்குக்கிதமா மெல்ல கொஞ்சம் அரிசிப்பொரி பொறுக்கக் கெடக்கு."

"யாரும்மா அந்தப்புறம் சாட் லைன்ல சாரு மனச நோக வெக்குறமாதிரி டைப்புறது? ஏஸியா ஈஸ்டா? ஏசியா வெஸ்டா? சாரு போன வருசம் ஆப்புரேசன் காப்புரேசன் ஆகி இப்பத்தான் கொஞ்சம் தெம்பா வந்து சின்னச்சுப்புரமணியம் பெரியராமச்சந்திரன்போல ஈஸ்டு ஆபிரிக்கா, சவுத்து அமெரிக்காலருந்து வர்ற தொலதூரப் பக்தர் தொல்லைக்கெல்லாமாச் சேத்து அரியாசனத்துல இருந்துகிட்டு இலக்குமணன்கூட குளோஸி போட்டோக்குப் போஸ் குடுக்குற அளவுக்கு வந்திருக்காரு. நீங்க வேற தொந்தரவு பண்ணாதீங்கம்மா! சார் சோர்ந்தா, அம்புஜம் அம்பேலமா ஆகிடும். அப்புறம் ஸ்பாமா நாங்க வாரத்துக்கு அகப்படுற ஈமெயில் மொகவரிக்கெல்லாம் அனுப்புற ஆயிரம் கிலோபைட்டு அம்புஜம் துண்டுjpgக்கும் இந்த வாரம் சாப்ஸ்கிரிப்ஸன் துண்டாயிடும். ஏற்கனவே, மைடூம் வார்மில்ல எக்கச்சக்கமானவுங்க வார்மாகி ஹார்ட்டாகி ஹாட் அட்டாக் வரமுன்னாடி ஹாட்மெயிலயே மூடினதால, அம்புஜம் வார அறிக்கல கால மாத்தம், கனமாத்தம், கனவுக்கொணம், காஷ்மீர்பக்கமுன்னு பீம்சிங் ஸ்டைலு க வரிசை விசனங்கள் கனெக்டுப் பண்ணாமலே தூங்கிட்டிருக்கு"

Do 30 I = 1, 125
Print *, "Hail our Writer!", I
Print *, "Hip Hip Hurry!!", I
Print *, "Hand over him the Gobble", I
Print *, "சார் பாதம் போற்றுதி!", I
Print *, "சாரை மரத்துல ஏற்றுதி!!", I
Print *, "சாரு கைல கல; மூஞ்சில கள, கழுத்துல மால", I

30 CONTINUE


"சுனிதா சார். ரெண்டு சந்தேகம். ஒண்ணு, 'ராமச்சந்திரனா? ராமசந்திரனா?' அடுத்தது, இந்த 'இந்த ராமச்சந்திரன் இல்லாத அந்த ராமச்சந்திரன் எந்த ராமச்சந்திரன்' கவித எழுதுன சகாதேவன், இன்னும் சாகாதேவனா? இல்ல, செத்ததேவனா?"

"ரெண்டுமே தப்பு; இராமசந்திரன். இந்த ராமசந்திரன எழுதுனது அந்த சகாதேவனுமில்ல, எந்த சாகாதேவனுமில்ல. ஒரு திருவனந்தபுரம் தர்மபுத்திரன்."

"சாரே வெரிகுட்டு எங்குறவரு ஒங்களப்பத்தி ஓப்பனா ஸோர்ஸ் அல்லாம் தொட்டுக்க வெச்சுக்கிட்டு எணையத்துல வர்றபோரவுங்களுக்குத் திங்கக்குடுக்குறாருன்னு..."

"நாலு வருசம் முன்னாடியே மன்றமையத்துல அவரு சாரப் பத்தி ஏதோ ஸார்ஸ், எபோலா, மேட்கௌன்னு பொலம்பிட்டிருந்தாருன்னு சாரோட ஓலவிசிறியொருத்தரு சார் சமூகத்துல அந்த நேரத்துலயே தமிழ்லையே மொதல்மொதலான ஈ-காம்ப்ளெயிண்ட்டு குடுத்திருக்காரு"

"கவலப்படாதீங்க சார். பழுத்த மரத்துலதான் பறவைங்க வந்து பதம் பாக்குமுன்னு எங்களப்போல ஒங்கள நல்லாத் தெரிஞ்சவுங்களுக்குத் தெரியாதா என்ன?"

"சார், ஆனா, அவரு சொல்றதுல நெயாயமிருக்க்குறதாத்தான் தோணுது"

" "

"சார்!"

"சாரோட எணைப்பு கட்டாயிட்டுதா?"

"சாரோட எணைப்பு கட்டாயிட்டுது"

"சார் இந்தியாக்கும் எலங்கைக்குமிடைல பாக்குநீரணய இன்னும் வெட்டி, சேது போடப்போறதப் பத்தி என்ன நெனைக்குறீங்க?"


"ஒரு காலத்துல எலங்கலதான் நல்ல கவித வர ஏலுமுன்னு பாத்துப் புடிச்சாந்தேன். பாத்துட்டேயிருங்க. மணி படத்துல அடுத்த வருசம் அப்புடி கவித ஒண்ணை எமதாக உருவி உருக்கிமெழுகி உருகி உருகி உயிரே தயிரே ஒப்பில்லாப்புளியோதரையேன்னு பாக்ல பேஸ் அதிர அதிர சிவமணி ட்ரமோட போடப்போறம். பாய்ஸ் கேர்ள்ஸ் எல்லாருமே சேந்து போய்ப் பாருங்க. அப்புறம், யூஎஸ் லாஸ் ஏஞ்சல்ஸ்ல என்னோட மகன்கிட்ட போன வருசத்துக்கு முன் வருசம் போயிருந்தனா.."

"சாரோட எணைப்பு கட்டாயிட்டுது"

"சாரோட எணைப்பு கட்டாயிட்டுது"


"சாரோ..."

Do 40 I = 1, 625
Print *, "Hail our Writer!", I
Print *, "Hip Hip Hurry!!", I
Print *, "Hand over him the Gobble", I
Print *, "சார் பாதம் போற்றுதி!", I
Print *, "சாரை மரத்துல ஏற்றுதி!!", I
Print *, "சாரு கைல கல; மூஞ்சில கள, கழுத்துல மால", I

40 CONTINUE


"சாரு வர்ற வாரம் வந்து மீதிக்குத் தொடருவாரு. வந்து கலந்துகொண்ட சாரோட ஓலைவிசிறி, சப்பான் விசிறி, சைனீஸ்விசுறி, பொத்தகமட்ட, ஸீலிங்பானு, பான்பராக்கு, கயித்து பங்கா, ஏஸி, ஈஸி, சூசி அத்தினி பேருக்கும் அம்புஜம் எணைய எதழ் சார்புல நன்றி."

No comments: