Friday, March 07, 2008

எழுத்தாளர்களின் இரங்கற்குறிப்புகள்

அள்ளல் -12

தமிழ் எழுத்தாளர்கள் ("இலக்கியவாதிகள்" என்று வாசிக்கவேண்டுமாம்) இறந்த உடற்சூடு ஆறமுன்னரே, தமக்கும் இறந்தவர்களுக்குமான பல~பல தொடர்புகளை, இறந்தவர்களைப் பரிதியிலும் தம்மை மையத்திலும் வைத்தெழும் சக 'பூ-கல்' பூத்த தமிழ்எழுத்தாளர்கள் சிலரின் இர/றங்கற்கட்டுரைகள் இணையத்திலும் இப்போது அடிக்-கடி வாசிக்கக்கிடைக்கிறன.


Dana Carvey (as Tom Brokaw) SNL "Gerald Ford Is Dead" free videos

6 comments:

மு. சுந்தரமூர்த்தி said...

//தமிழ் எழுத்தாளர்கள் ("இலக்கியவாதிகள்" என்று வாசிக்கவேண்டுமாம்) இறந்த உடற்சூடு ஆறமுன்னரே, தமக்கும் இறந்தவர்களுக்குமான பல~பல தொடர்புகளை, ... //

மு. சுந்தரமூர்த்தி said...

Sorry for the incomplete comment. Blogger was inaccessible when I was editing.

Reactions of many bloggers were normal considering the polpularity of Sujatha. He touched hunderds of thousands of readers in two generations. Of course, there were several eulogies which can be attributed to the caste affinity of those bloggers but at the same time there were few superficial criticisms which were borne out of caste prejudice. I consider Sundaravadivel's post as a clear example of the latter. At the time of grieving when you (not you Peyarili, a generic you) say something negative about the dead you got to be more specific rather than handwaving.

Anonymous said...

//Reactions of many bloggers were normal considering the polpularity of Sujatha. He touched hunderds of thousands of readers in two generations//

எக்ஜாக்ட்லி

//Of course, there were several eulogies which can be attributed to the caste affinity of those bloggers but at the same time there were few superficial criticisms which were borne out of caste prejudice. I consider Sundaravadivel's post as a clear example of the latter. At the time of grieving when you (not you Peyarili, a generic you) say something negative about the dead you got to be more specific rather than handwaving.//

கை குடுங்க சுந்தரமூர்த்தி. இதே பொருளில், மூச்சைப் பிடித்துக் கொண்டு, முழுபக்கத்துக்கு மறுமொழி ஒன்றை சுந்தரவடிவேல் பதிவில் போட்டால், ரெண்டு நாளாகியும் காணவில்லை. இவர் சென்சார் பண்ணக் கூடிய ஆளில்லையே, ஒரு வேளை ஸ்பாமிலே போய்விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அலுவலக் கணிணியில் இருக்கும் பிரதியைத் தேடிப் பிடித்துப் திரும்பவும் போடவேண்டும்.

-/பெயரிலி. said...

சுந்தரமூர்த்தி,
நீங்கள் பொதுவாக 'you' என்று சொல்லியிருக்கும்போதும், வாசிக்கிறவர்கள் தவறாக விளங்கிக்கொள்ளாமல், கொல்லாமலிருக்க இவ்விளக்கம்:

என்னுடைய இந்த இடுகை/இணைப்பு, தனியே சுஜாதாவின் இறப்பினை முன்னிட்டதோ, சாதித்(த) தொடர்பானதோவல்ல. சுஜாதா இறந்தது குறித்த (இதையடுத்த) இடுகைகூட இடும் எண்ணமிருக்கவில்லை - மாயா, வந்தியத்தேவன் ஆகியோரின் சுஜாதாவை ஈழத்தமிழருக்கொரு தெய்வமாக்கும் சிறுபிள்ளைத்தனத்தினைக் காணும்வரைக்கும்; குறிப்பாக, மாயாவின் "திரட்டிகள், பதிவர்கள் சுஜாதாவின் இறப்பின் பின்னான கடுப்பான பதிவு/வர்களைக் கண்டிக்கவேண்டு'மென்ற அம்மாவைத் திருவிழாவிலே தொலைத்த ஆறுவயதுப்பையனின் அழுகைத்தனம் தந்த எரிச்சல் மேம்படும்வரைக்கும்.

நான் இவ்விடுகையிலே சொல்லவந்த "பல~பல தொடர்புகள்", 'அறுபத்தைந்தாமாண்டு அன்னாருக்கு அறுசுவை உண்டி ஆறுமுகவிலாசிலே வாங்கிக்கொடுத்தேன்' மட்டத்திலே, 'எப்படா போவார்கள்? எனக்குமொரு கதையும் கருத்தும் அவருக்கு அழும் சாட்டிலே என்னை மையப்படுத்துவோம்" என்று காத்திருப்பதாகத் தோன்றும் வகையிலே எழுதும் படைப்பாழிகளின் சொறிகளைச் சொன்னேன். இருந்து பாருங்கள்; இன்னும் ஓரிரு மாதத்துள்ளேயே, 'செத்தும் பொருள் கொடுத்தான் சீதாக்காதி' வகையிலே, சுஜாதாவின் இறப்பை வைத்தே எத்தனை புத்தகங்கள் வரப்போகின்றனவென்று ;-)

மு. சுந்தரமூர்த்தி said...

//நீங்கள் பொதுவாக 'you' என்று சொல்லியிருக்கும்போதும்//

இதற்காகத் தான் (not you Peyarili, a generic you) என்று எழுதியிருக்கிறேன். அடுத்த சில நாட்களுக்கு தலை போகிற வேலை இருக்கிறது. முடிந்த பிறகு உந்துதல் இருந்தால் விலாவரியாக மீண்டும் வருகிறேன்.

-/பெயரிலி. said...

சுந்தரமூர்த்தி,
அது நிச்சயமாகப் புரிந்தேயிருக்கிறது. அதுதான், "நீங்கள் பொதுவாக 'you' என்று சொல்லியிருக்கும்போதும்" என்று எழுதினேன்.