Monday, July 21, 2008

இருபத்தைந்து ஆண்டுகள்


அடிப்படைப்படவுரிமை: கலாநிதி. மிரண்டா அலிசன்

கடந்த பாதையைத் திரும்பிப் பார்த்தேன்;
கிடந்த பாயிற் புரள்கிறேன்.
புரண்ட பாயைக் கிண்டிப் போக,
வரண்ட சாலையில் எழுகின்றேன்.

சுற்றும் வட்டத்து,
சுழிப்பரிதிகளைச்
சுட்டிச்சுட்டி
நாண் பயணம்,
நாட்கணக்கு.

4 comments:

Anonymous said...

ம்... :-(

-/பெயரிலி. said...

ம்ம்.. :-X

Anonymous said...

//சுற்றும் வட்டத்து,
சுழிப்பரிதிகளைச்
சுட்டிச்சுட்டி
நாண் பயணம்,//

'மையம்' ('மய்யம்' இன்னும் சிறப்பானது) எண்ட சொல்லையும் சேர்த்திருந்தா சிறந்த பின்-நவீனத்துவக் கவிதையாக இருந்திருக்கும்.


உதில ஆய்வுகள் செய்தவன் எண்டதால பேர் தேவையில்லை.

-/பெயரிலி. said...

நிச்சயமாக மையங்கள் கிடக்கின்ற ஆண்டுகள்தான்