Wednesday, February 15, 2017

கண்டதைச் சொல்லுகிறேன்

மு.கு.: இலங்கைப்பிரச்சனை குறித்து எழுதுவதானால், இலங்கையிலேதான் #போராளீஸ் ஆக இருக்கவேண்டுமாம்; அல்லது, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் புலம்பெயர் சேர்டிபைட் #ரியல்மனிதப்போராளீஸ் ஆக இருக்கவேண்டுமாம். தமிழக அரசியல், அரசியியல், சிரியியல், சீரியல் பற்றிப் பேச அப்படியேதும் கட்டம் கட்டின க்வாலிபிக்கேஷன் சட்டமேதுமில்லாததாலே, ப்ரீயா #இன்ரநஷனல்ஓல்பேர்ப்பஸ்போராளி மாமேன் உட்ட பத்தி, காலம் இது. கண்மணி அம்போடு கடல்கடந்தவன் நான் எழுதும் காலமே... 😛


காங்கிரஸ் இலக்கியவாதி ஜோதிமணி சசிகலாவைப் பேரூழல் பற்றிக் கிண்டல் ட்வீற்றரிலே செய்கிறார்; ஆனால், ராஜீவ்-சோனியாவின் போபர்ஸ்-குவாட்ரோட்ஸி பேரூழல்கள் பற்றி எதுவும் பேசமாட்டாராம். பிபிஸி தமிழ் இற்கு, சசிகலா "முதலமைச்சராக"க் கட்சியாலே தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஊழல் பற்றி அதிர்ந்து பொருந்தாதென்று கருத்துச் சொன்ன சிதம்பரம், "சாரதா சிட்பண்ட் ஊழல்" நளினி பற்றி ஒரு கணம் யோசித்தாரோ தெரியவில்லை; கேட்ட பிபிஸி தமிழர்தாம் உணர்ந்தாரோ தெரியாது.

இப்போது, "புதிதாக மெரினாவிலே அரசியல் கற்றுக்கொண்டவர்களுக்கு" ஊழல் பற்றிய பாலபாடம் எடுக்கிறதையும் தேசியகீதத்துக்கும் கொடிக்கும் ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அவமரியாதை செய்துவிட்டதாக இந்துத்துவா கும்பலோடு சேர்ந்து ஜனவரி 15 இலே ஒப்பாரி வைத்த திராவிடப்பொன்னாடு அந்நாள் கண்ட சகோதரர் இன்னோர் அற்புதமான புழுக்குழு; சக்கரைமண்டி, வீராணம் குழாய் எல்லாம் நடக்கையிலே & கடக்கையிலே அவர்கள் பெற்றோரே நிஜார், தாவணி போட்டவர்களாக இருந்திருக்கக்கூடிய இப்பிற்காலப்பிறப்புகள், கனிமொழி, ராஜா, நிராடியா, திஹார் சிறை பற்றிப் பேசினால், அநீதி என்று அலறினார்கள்; ஆனால், இப்போது, ஊழலை ஒழிக்கப் பெருச்சாளி பிடிக்கும் பொறியோடு அலைகின்றார்கள். கிருஷ்ணன், ஆலடி அருணா போன்றோரைப் போட்டுத்தள்ளியவர்களை "தள்ளிவைத்தும்" சந்தித்துக்கொண்டு இருக்கின்றதைச் சொன்னால் குடும்ப உறவுக்கண்ணீர்க்காவியம் பேசும் இவர்களைக் காண அண்ணாவும் வீரமணியைக் காணப் பெரியாரும் இல்லாததையிட்டுப் பெருமகிழ்ச்சி!

அனுராதா ரமணன் பாலியற்குற்றம் சாட்டிய சங்கரராமன் கொலைவழக்கிலே உள்ளேபோன, இருள்நீக்கி சுப்பிரமணிக்கு மலம் கழிக்க வாழையிலை எடுத்துக்கொடுத்த ஐ ஏ எஸ் பேராணையர்கள், விடுதலைக்குழைத்த வலதுசாரிப்பத்திரிகையாளர், அரசியல்வாதிகள், வெளியே வந்தபோது வண்டியிலே ஏற்றிப்போகக் காத்திருந்த முற்போக்கு இடதுசாரிகள் போன்றவர்களோ இவர்களைத் தூக்கிப்பிடித்துப் பதறிய, கதறிய, வலதுகையிற் சிலம்பு தூக்கியாடிய அதே கும்பலே இன்றைக்கு ஊழலும் கொலையும் திராவிடத்தின், தமிழ்த்தேசியத்தின் ஊற்றுக்கண் என்பதுபோல ஒரு பாவனையைத் தன் கையிலே கொண்டிருக்கும் ஊடகங்களாலும் தம் சமூகவூடகப்பேச்சுகளாலும் காட்டிக்கொண்டிருக்கின்றது. செத்ததால், நீதிபதியால் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவின் அள்ளின கும்பனிச்சபைகளிலேயெல்லாம் சசிகலா ஒதுக்கிவைக்கப்பட்டபோது குந்தியிருந்த சோ ராமசாமிவாளையும் அவரின் தோஸ்த் குருமூர்த்தியையுமே ஊழலுக்கெதிரான போராட்டக்குரல்களாக இவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டிக்கொண்டிருப்பது பெருந்துக்ளக்தனம்!

(இருள்நீக்கியை வழக்கிலே சிறை செய்ததைக்கூடச் சகபிராமணர் என்ற அளவிலே ஜெயலலிதாதான் செய்யமுடிந்தது. வேறு எவர் செய்திருந்தாலும், தமிழகத்தின் கலாசாரக்காவலாளிகளும் பண்பாட்டுப்பாளர்களும் அறிவுஜீவிகளும் முற்போக்காளர்களும் வலதுசாரிகளும் அனைத்துமாய்ப் பிளந்து ஒன்றியிருக்கும் அவர்கள் விட்டிருக்கமாட்டார்கள்)

மகாயோக்கியர்கள் குறுக்கும் நெடுக்கும் மேடையிலே வசனநடை போடுகையிலே இடையிலே கிடக்கும் சொம்புதான் பாவம்!

கரிச்சட்டிச்சசிகலாவும் ஊழல்வண்டிதான்; தாச்சிச்சட்டிச்சாட்டுகின்றவர்களும் ஊழல்வண்டிதான். வண்டி ஓடம் ஏறியிருக்கின்றது. ஓடம் வண்டியிலே ஏறாமலே போகுமோ?

Darkness does not need a litmus test.

No comments: